search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பள்ளிகள்"

    • பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
    • தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வோடு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய தீர்வினை காண வேண்டும்.

    எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வோடு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெடிகுண்டு தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.

    ஊட்டியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    பிரபல தனியார் பள்ளிகளுக்க இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே நேற்று கோவையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஊட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை தீவிரமாக ‘சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. இந்த தகவல் சென்னை முழுவதும் பரவியது. அதிர்ச்சி அடைந்து பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்து வந்து தங்கள் பிள்ளைகளை பதற்றத்துடன் அழைத்து வெளியேறினார்கள். சென்னை முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

    இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை தீவிரமாக 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் போலீஸ் உதவியை நாட சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இன்டர்போல் போலீஸ் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் முழுமையாக சோதனை நடத்தி உள்ளதால் அச்சமின்றி பள்ளிகளை நடத்தவும் அந்தந்த காவல் நிலைய போலீசார் உரிய பாதுகாப்பை வழங்கவும் சென்னை காவல் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை.
    • பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அறிவுரை.

    சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே

    கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் அச்சத்தால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர்.

    இந்நிலையில், சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேலும், " காவல் துறையினர் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இ-மெயில் ஐடியில் இருந்து 13 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்.
    • வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டம்.

    சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், திருமங்கலம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து 13 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    மேலும், வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை கூறுகையில்,

    பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    வெடிகுண்டு மிரட்டல் செய்தியால் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளிகளில் குவிந்து வரும் பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரே ஒரு நபர் தான் என்பது தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாக அந்த நபர் குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மெயில் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது.
    • பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.

    பணகுடி:

    தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிவடைய உள்ள தருவாயில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகர் மற்றும் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.

    வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள மத்திய அரசு இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது. ஆனால் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் அந்த நோட்டுக்களை வாங்க மறுப்பதால் பெரும்பாலானவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்கப்படாது என்ற நிர்வாகங்களின் அறிவிப்பால் மாணவ-மாணவிகளின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.

    • பெற்றோர்கள், விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
    • சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29-ந்தேதிக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

    சென்னை:

    கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற நாளை (வியாழக்கிழமை) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டில் தங்களது பிள்ளைகளுக்கு இலவச சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர் நாளை முதல் மே 18-ந்தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    குழந்தைகளை நுழைவு நிலை வகுப்பில், அதாவது எல்.கே.ஜி. முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பு முதல் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

    மே 18-ந்தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் மே 21-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

    இந்தத் திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2019 ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து 2020-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2017 ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு ஜூலை 31- ந்தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

    தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்தோர் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று ஆகியவற்றை உரிய அலுவலரிடம் இருந்து பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    பெற்றோர்கள், விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும் கட்டணமின்றி விண்ணப்பிக்கத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியில் மே 23-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர்.

    தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் மே 24-ந் தேதி இணைய தளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29-ந்தேதிக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
    • சில தனியார் பள்ளிகள் ஒரு பள்ளிக்கு அனுமதி வாங்கி, கிளை பள்ளிகளை திறந்து, அதில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டு வருவதாக புகார் வந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த சுயநிதி பள்ளிகள் (மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ., சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள்) மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்று.

    இந்த நிலையில், சில தனியார் பள்ளிகள் ஒரு பள்ளிக்கு அனுமதி வாங்கி, அதனை கொண்டு கிளை பள்ளிகளை திறந்து, அதில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டு வருவதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்துக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது.

    அந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் 162 தனியார் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இந்த பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெற இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பள்ளிகள் மீது மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு.
    • தனியார் பள்ளிகள் குறித்து பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம்.

    மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் உறுதிமொழி படிவம் பெற்றது உறுதிபடுத்தப்படும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் இன்று 987 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தகவல்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன், தனியார் பள்ளி சங்கங்கள் பேச்சுவார்த்தை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் நேற்று தெரிவித்திருந்தார்.

    ஆனால் தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின. எனினும் தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

    மொத்தம் 987 பள்ளிகள் இன்று செயல்படவில்லை என தகவல்கள் வெளியாகின. அவற்றின் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை இன்று பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன்,  பல்வேறு தனியார் பள்ளி சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முழுவதும் வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    • தமிழக அரசு எச்சரிக்கை எதிரொலி காரணமாக மதுரையில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.
    • கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

    மதுரை

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கூடத்தில், மாணவி ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உறவினர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட பள்ளிகூடம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இது ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் 'கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்படாது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் அறிவிப்புக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 'தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்' என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இருந்தபோதிலும் தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் இன்று மூடப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் 300 தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் எதிரொலியாக மதுரை மாவட்டத்திலும் தனியார் பள்ளிகள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரையில் இயங்கி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள், இன்று வழக்கம் போல திறந்து இருந்தன. எனவே மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட மெட்ரிகுலேஷன் தனியார் மேல்நிலைப்பள்ளி சங்க நிர்வாகிகள் கூறும் போது, 'மதுரை மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஏராளமான வக்கீல்கள், இன்று மதுரை உயர்நீதிமன்ற நுழைவுவாயில் முன்பு திரண்டு வந்தனர். அப்போது பலியான கள்ளக்குறிச்சி மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வக்கீல்கள், 'தனியார் கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளின் பள்ளிமூடல் மிரட்டலை தடுத்து நிறுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    ×